Kann Kavarum Bommaiyadi
Thanga Malar
Hero Gemini Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist Kavi Kunjaram
Singers P.Suseela,L.R.Eswari,Chorus
Year 1969
Song Lyrics

கண் கவரும் பொம்மையடி
கன்னியரின் திறமையடி
கலை எழிலும் கைத்தொழிலும்
கலந்தாடும் புதுமையடி....(கண் கவரும்)

அஹிம்சையாலே விடுதலை கண்ட
அண்ணல் காந்தியை பாரடி
அரசை வெறுத்து அன்பை வளர்த்த
அமரர் புத்தர் தானடி
அழிவு செய்யும் பாவியர்க்கும்
அருள் காட்டும் யேசுவடி.....(கண் கவரும்)

பலரும் புகழும் அபிநயம் காட்டும்
பரதநாட்டியம் பாரடி
மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும்
மணிப்புரி நடனம் தானடி
கலை மொழியால் கதக்களியால்
கதை சொல்லும் காட்சியடி..(கண் கவரும்)

தன் நிழல் சாயாத தஞ்சை கோபுரம்
தாஜ்மகால் இது தானடி
மண்ணும் கல்லும் மனிதர்களாலே
மகிமை அடைந்ததை பாரடி

மனிதர்கள் மட்டும் மாறாத
வறுமையில் வாடுவதேனடி
தன்னலமும் போட்டிகளும்
சதிராடும் விந்தையடி (கண் கவரும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY