Thanga Malare Ullame
Thanga Malar
Hero Gemini Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1969
Song Lyrics

தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதினில்
அருள் விளங்கும் தெய்வமே...(தங்கமலரே)

தூக்கி வைத்த கரந்தனிலே
தாயைக் கண்டேனே – நீ
துள்ளி வந்து குதித்தபோது
சேயைக் கண்டேனே

சூடி வைத்த மலர்களில் உன்
கருணை கண்டேனே – என்னை
தொட்டிழுத்து அணைத்தபோது
தெய்வம் கண்டேனே......(தங்க)

எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ
எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து காணுமோ
அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா –என்னை
ஆள வந்து வாழ வைத்த இறைவனல்லவா...(தங்க)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY