Amaithi Amaithi Amaithi Amaithi
Thanga Malar
Hero Gemini Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist Ku.Ma.Balasubramaniyam
Singers P.Suseela,P.B.Sreenivas
Year 1969
Song Lyrics

வித்தாகி முளையாகி செடியாக கொடியாக
விளைந்த காதல்
பூவாகி பிஞ்சாகி காயாக கனியாக
கனிந்த காதல்

அமைதி அமைதி அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல்
அருகில் வா என அழைத்தது

அங்கும் இங்கும் தேடி நின்றாள்
அந்த அழகும் கண்களில் கிடைத்தது
அழகும் கண்களில் கிடைத்தது
அமைதி அமைதி அமைதி அமைதி.....

யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து
நாணத்தினால் தலை குனிந்தது
பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல்
மார்பினில் அவளை அணைத்தது....(அமைதி )

வையம் உறங்கிடும் நேரத்திலே
அவள் மலரணை மேலே கனியானாள்
மலரணை மேலே கனியானாள்
வாழ்வின் ரகசியம் அறிந்து கொண்டான்
அவன் கனியும் முன்னே கிளி ஆனான்
கனியும் முன்னே கிளி ஆனான்......(அமைதி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY