Aasai Vaithal Adhu
Thanga Malar
Hero Gemini Ganesan
Music Director T.G.Lingappa
Lyricist Kannadasan
Singers P.B.Sreenivas
Year 1969
Song Lyrics

ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகி பிரிவது துயரம்......(ஆசை)

பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள் – இதில்
சுற்றமென்றே ஒரு தோகை வந்தாள் – அவள்
சொந்தம் மறந்து பிரிந்து விட்டாள் (ஆசை)

அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள் – இதில்
கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள்
காதல் நாடகம் சில நாள்....( ஆசை )

நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கிறேன் – மன
நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி
பறந்திடத் துடிக்கிறேன்...(ஆசை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY