Pozhuthu Vidiya Poiyi
Kaidhi
Hero S.Balachandar
Music Director S.Balachandar
Lyricist K.D.Santhanam
Singers Unknown
Year 1951
Song Lyrics

பொழுது விடியப் போயிச் சேரணும் – வைக்கலை வித்து
பொழைக்கும் வழியைப் பார்த்து தீரணும்
பழுதுபட்ட லாடத்தை மாத்தி புதுசு ரெண்டு
பணத்தைக் கொடுத்துக் கட்டிப் போடுறேன்......

மானம் பார்த்த சீமையாச்சுதே – மழையில்லாமே
வயலும் வரப்பும் வறண்டு போச்சுதே
தான தருமம் செய்த நாட்டிலே – குடிக்கக் கூட
தண்ணியில்லா நிலைமையாச்சுதே.....

உழவினாலே பிழையில்லாம குறையைப் போக்கணும்
ரேஷன் குறையைப் போக்கணும் – இனி
மழையில்லாம விளவுண்டாக வழியைப் பார்க்கணும்
புது வழியைப் பார்க்கணும்

பருத்தி விளையும் சீமையிலே துணிக்குப் பஞ்சமா
பரந்து கிடக்கும் பூமியிருக்க உணவுப் பஞ்சமா
படிச்சுப்புட்டு வேலையில்லாக் கூட்டம் கொஞ்சமா-அவங்க
பாடுபட்டா நம்மை எந்த நாடும் மிஞ்சுமா...

தேர்தலுக்கு நாளும் வந்தாச்சி – சட்டசபை
தேர்தலுக்கு நாளும் வந்தாச்சி – ஓட்டுக்காக
தெருத் தெருவா பிரசங்கமாச்சி – நாம்ப
யாருக்குத்தான் போடறதுன்னு புரியாம
அல்லும் பகலும் தொல்லையாப் போச்சி...

ஆனால் இந்த வாட்டி....
கள்ள மார்க்கெட்காரங்க வந்தா யோசிக்காம
கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளோணும்
உள்ளபடிக்கு நல்ல மனிசனா பார்த்து நம்ப
ஓட்டைக் கொடுத்து நாட்டைக் காக்கணும்......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY