Minnalai Pole En Kathal
Kaidhi
Hero S.Balachandar
Music Director S.Balachandar
Lyricist K.D.Santhanam
Singers Jikki
Year 1951
Song Lyrics

மின்னலைப் போலே என் காதல் வானில்
விஜயன் ஒரு நாள் வந்தார்
மென்மையான என் மனதில்
துன்பமே நிலைபெறச் செய்து
மின்னலாக மறைந்தார்...
மீண்டும் மின்னலாக மறைந்தார்..

உண்மையும் அன்பும் நிறைந்த உத்தமரே
என்னுயிரின் உகந்த துணையானார்
என்றே மகிழ்ந்திடும் போதினிலே....
அவர் இன்னொரு பெண் தன் வசமானால்
என் வாழ்வில் சுகமேது
உலகில் இருந்தும் லாபமேது.....(மின்னலை)

என்னை அவர்க்கீந்தேன் அவர்
தன்னை எனக்குத் தரும் முன்னே...நான்
என்னை அவர்க்கீந்தேன்....
என் எண்ணமெல்லாம் மண்ணாச்சே
கிளி இலவு காத்த கதையாச்சே...(மின்னலை)

காதல் களிப்பிழந்தேன்...இளமையில்
காணும் நலமிழந்தேன்.....எனினும்
காதலர் சுகமுறவே......காதலைத்
தியாகம் செய்தோம் என மகிழ்ந்தேன்...(மின்னலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY