Bethai Penn Madhiyale
Kaidhi
Hero S.Balachandar
Music Director S.Balachandar
Lyricist K.D.Santhanam
Singers T.S.Bhagavathy
Year 1951
Song Lyrics

பேதைப் பெண் மதியாலே
மன வேதனைதான் இந்நாளே
கொலைபாதகன் செயலாலே
நலமேது வாழ்வினிலே இனிமேலே...

ஆசையாகப் பேசும்
பகல் வேஷக்காரன் மோசம்
அறியாமல் கொண்டேன் நேசம்
அதனால் இழந்தேன் சந்தோஷம்

சொல்லிலே அமுதூறும் அவர்
உள்ளமோ விஷம் சேரும்
அற்ப புல்லர்கள் வாழும் ஞாலம் இதில்
நல்லவர்க்கு ஏது காலம்....ஏது காலம்...

கனவிலே கண்ட காட்சி போல் என்
காதலின் நிலையாச்சே...நிலையாச்சே...
மனதில் வரைந்த மகிழ்ச்சி ஓவியம்
மறுகணத்தில் மறைந்து போச்சே...பாழாச்சே..(பேதை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY