Be Happy Be Cheerful Be Jolly
Kaidhi
Hero S.Balachandar
Music Director S.Balachandar
Lyricist K.D.Santhanam
Singers Radha Jayalakshmi
Year 1951
Song Lyrics

Be Happy Be cheerful Be Jolly….
இன்பக் கனவாம் வையகமே – இதில்
என்றும் இனிதாய் மகிழ்ந்திடலாம்
அன்பெனும் சுடரே வழிக் காட்டும்
அதன் அற்புத சக்தி உயிரூட்டும்...... (Be Happy)

சென்றதை எல்லாம் எண்ணாமல்
தீவிர சிந்தனை பண்ணாமல்
இன்று முதல் புது வாழ்வினிலே
இனிதாய் மனமே மகிழ்வீரே.....( Be Happy)

உயர்வாகிய செம்பொன்னுமே- தினம்
மெருகில்லாவிடில் மின்னுமோ
அயர்வாகும் மன விசாரம்
அதற்கு அடிமையாவதோ வீரம்.....( Be Happy)

புன்னகை தவழும் முகமும்
புதுமை நாடும் மனமும்
உன்னதமாகிய வாழ்விலே
மிக உயர்ந்த பண்பாகும்.....ஆ...ஆ...

நேர்மை அழியாது பொய் நெடுநாள் வாழாது
சீர்தரு மதியின் ஒளியை
முகில் சென்று மறைப்பதும் உண்டு – இதை
தினமும் நேரில் கண்டும்

பழி வந்ததே என எந்த நேரமும்
சிந்தனை செய்வதனாலே
பலன் தந்திடுமோ கை மேலே
அதனாலே......இனிமேலே.......(Be Happy)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY