Kodumai Piranthu Valarumidam
Kaidhi
Hero S.Balachandar
Music Director S.Balachandar
Lyricist K.D.Santhanam
Singers Chorus
Year 1951
Song Lyrics

கொடுமை பிறந்து வளருமிடம் சிறைக்கூடமே
மனிதனின் மடமை தீரவே
மனதை மாற்றிடும் கூடமே கலைக்கூடமே

கடுமையான தண்டனையாலே
காட்டு விலங்காகியே
கல்லுடைத்து செக்கிழுத்து
உள்ளம் நொந்து மாளவே...(கொடுமை)

மனைவி மக்கள் தம்மையே
பிரிந்து வாழும் சோகமே
மாறிடாமல் துன்பக் கண்ணீர்
சேர வாழ்நாள் தீரவே......(கொடுமை)

ஏழைக்கிரங்காது பிறர் துயர் எண்ணியும் பாராது
ஆளுக்கொரு நீதி பேசும் அறிவிலா சமூகம்
நம்மைத் திருடனென்று இகழும் வீணிலே
சிறையில் தள்ளி மகிழும்........(கொடுமை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY