Aana Vilasam Thanappa
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers T.S.Durairaj
Year 1951
Song Lyrics

ஆனா விலாசம் தானப்பா உலகில் பெரியது
அதற்கிணையானது வேறேதப்பா
மூனா பசங்களையும் நானா விதங்களிலும்
முன்னேற செய்கிறதும் முதலாளி ஆக்கிறதும் (ஆனா)

கச்சேரி பண்ணுகிற கலிகால பாகவதர்
சிஷ்ஷை கற்கும் பெண்மணிகள்
சிநேகம் பிடிக்கிறதும்
ஆனா விலாசம் தானப்பா......

பக்தி விதம் காணாத
பாகவதர் பணத்தையெல்லாம்
அத்தர் சென்ட் வியாபாரி
அபகரித்து வாழுறதும்....(ஆனா)

டானா டூனா தெரியா
ரௌடி பசங்களெல்லாம்
மேனாட்டுக்காரன் போல
வெளிச்சம் போட்டு திரியறதும் (ஆனா)

சொந்த முயற்சியில்லான்
தொழில் செய்ய பயிற்சி இல்லான்
சந்தர்ப்ப வசதியினால்
தனவந்தன் ஆகுறதும்......(ஆனா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY