Chinnanchiru Kiliye Kannamma

Hero | S.V.Sahasranamam & T.S.Balaiah |
Music Director | C.R.Subbaraman |
Lyricist | Mahakavi Bharathiyar |
Singers | M.L.Vasanthakumari,V.N.Sundaram |
Year | 1951 |
Song Lyrics
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்…….(சின்னஞ்சிறு)
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே....(சின்னஞ்சிறு)
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால்
உன்னைப் போய் ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடி..
உன் கண்ணில் நீர் வடிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ.....

COMPILED AND UPDATED BY