Nalla Penmani Miga Nalla
Manamagal
Hero S.V.Sahasranamam & T.S.Balaiah
Music Director C.R.Subbaraman
Lyricist Udumalai Narayanakavi
Singers T.A.Mathuram
Year 1951
Song Lyrics

நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி
தாய்நாட்டு நாகரிகம் பேணி
நடப்பவள் எவளோ அவளே
நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி

வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை
தன் மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் சேலை
பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை - நல்ல
பழக்க வழக்கத்தோடு நூலைப் படிப்பவள் எவளோ அவளே (நல்ல)

அம்மாவுக்கு உதவியாக ஆக்கி பழகணும் சோறாக்கி பழகணும்
அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்
அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கணும் - தினம்
உயர் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே (நல்ல)

புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை புகழக்கூடாது – கொண்ட
புருஷனோடு வம்புச் சண்டை போடக் கூடாது
இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண
ஏற்றத்தில் இருமாந்திடாது இருப்பவள் எவளோ அவளே (நல்ல)

பொட்டு வைத்து கோலங்கூடப் போடத் தெரியணும் - புத்தி
புகட்டும் நாட்டுப் பாடல் கூடப் பாடத் தெரியணும்
கஷ்டம் வந்தபோதும் மானந் தன்னை காக்கணும் - தன்
கணவன் சுகத்தை நாளும் பேணும் கண்மணி எவளோ அவளே (நல்ல)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY