Konja Vaa Konjam Neram
Selviyin Selvan
Hero Ravichandran
Music Director T.Pugazhenthi
Lyricist Vali
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1968
Song Lyrics

கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா
கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா (கொஞ்ச)

கண்ணிரெண்டும் நிலம் பார்க்க
கையிரெண்டில் வளை குலுங்க
காலிரெண்டும் மெல்ல மெல்ல நடப்பதெங்கே

செல்லுவதைப் போலிருக்கும்
செல்லாமல் நின்றிருக்கும்
பொல்லாத நாணத்தை நான் மறைப்பதெங்கே
தொட்டதும் கைப் பட்டதும்
மொட்டு மலராகி போனதோ.....(கொஞ்ச)

அணை கடந்து போனதென்ன
ஆசை வெள்ளமே....
இன்னும் கடை விரித்து பார்ப்பதென்ன
அன்பு உள்ளமே

வாய் திறந்து சொல்வதெப்போ
ஆசை என்பதை
இரு விழி மறந்து போவதுண்டோ
ஜாடை செய்வதை
என்னவோ அதை உன்னிடம்
சொல்ல தெரியாமல் போனதே.... (கொஞ்ச)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY