Vanthal Indha Neram
Selviyin Selvan
Hero Ravichandran
Music Director T.Pugazhenthi
Lyricist Trichy Thiyagarajan
Singers P.Suseela
Year 1968
Song Lyrics

வந்தால் இந்த நேரம் வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை தா தா தா (வந்தால்)

போனால் வராது இளமை அது
தானாய் தராது இனிமை
போனதெல்லாம் இன்று பழமை
இனி காணப் போவது புதுமை
புதுமை.......புதுமை.......(வந்தால்)

சுவையோடு சுவை சேர்த்து
துணையோடு துணை கோர்த்து
நவரசமான கலைக் காட்ட
நாத வீணையில் இசை மீட்ட...(வந்தால்)

அன்பெனும் வாசல் திறந்திருக்க
அமுத கலசத்தை ஏந்தி நிற்க
இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட
இதுதான் வாழ்க்கையென ரசிக்க
ரசிக்க........ரசிக்க......ரசிக்க.....(வந்தால்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY