Munnalil Aandavane Neril
Song Lyrics

முந்நாளில் ஆண்டவனே நேரில் வந்து
பத்தினிமார் துயரம் தீர்த்தாராம் – ஆனால்
இந்நாளில் பத்தினிமார் படும் துயரம்
தீர்ப்பதற்கோ எவருமில்லை.......

இப்போ தீராத துயராலே பாழாகியே
பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க
தீராததேனோ துன்பம் தானே
தெய்வம் இல்லாம போனதோ.....(இப்போ)

சுகமாக தாய் வீட்டில் வளர்ந்த பெண்கள்
சொத்துரிமை இல்லாத காரணத்தால்
தவறிப் போய் ஏழைக்கு வாழ்க்கைப்பட்டால்
தவிக்கிறார்கள் பெற்றோரும் மதிப்பதில்லை

பணம் இருந்தாக்க உலகத்தில் எல்லோருமே
தேடியே சொந்தம் எல்லாமே கொண்டாடுவாங்க
இல்லாத போது யாருமே
எண்ண மாட்டாங்க சொந்தமே.....(இப்போ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY