Perinbame Vazhvile
Song Lyrics

பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே
நீங்காத ஆனந்தம் நாம் காணவே
தீராத நோய் தீர்ந்ததே வாழ்நாளிலே
மாறாத ஆனந்தம் நாம் காணவே...(பேரின்பமே)

ஆ...ஆ..செல்வம் தன்னை சேர்த்திடுவோம்
சிறப்புடனே வாழ்வோம் தந்தை காணவுமே
ஆ..ஆ.சீராகவே நாம் வாழ்ந்திடுவோம்
செல்வம் சேரவே துன்பம் நீங்குமே

எந்நாளுமே இன்பம் ஓங்குமே
எண்ணம் போலே யாவுமே
மெய்யாகவே நேருமே.....
பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே..

ஆ.....ஆ..வாரீர் அன்பே ஆருயிரே
வாழ்வினிலே என்றும் இன்பம் நாம் அடைவோம்
ஆ.....ஆ..ஆராரோ என்றே ஆசையுடன்
நீயும் பாடுவாய் பையன் தூங்குவான்

ஆனந்தமாய் நான் காணுவேன்
எண்ணம் போலே யாவுமே
மெய்யாகவே நேருமே.....
பேரின்பமே வாழ்விலே சேர்ந்ததே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY