Melnattu Ilaingar Vimanam
Song Lyrics

மேல் நாட்டு இளைஞர் விமானம் கண்டார்
மோட்டார் கண்டார் ரயிலைக் கண்டார்
இங்கிருக்கும் நாமெல்லாம் இட்லியும் சட்னியும்
ஸ்பெஷல் தோசையும் தவிர வேறென்ன கண்டோம் – இன்று
ஆறவுன்சு ரேஷன் வந்து அதற்கும்
திண்டாடுகிறோம் திண்டாடுகிறோம்......

பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே
வேலை கெடைக்கல்லே ஆனால்
பெண்களைக் கண்டால் ஜோராக வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்

படித்தாலே போதுமா மூளை வேணுமே
காசு சேர்க்கவே ஏனோ
உண்மை சொன்னால் நீயே வாலாட்டுறாய்
வீணே என் மேல் பாயுறாய்.....( பசி )

எம் ஏயும் பி ஏயும் படித்து விட்டு
எத்தனயோ பேர் ஹோட்டல் சர்வரானார்
அந்த ஒரு வேலையும் நாம் காண்டோமில்லை
ஆனாலும் புஷ்கோட்டில் குறைச்சலில்லை

சுகமாக வாழவே ஆசை குறையல்லே
மூளை சரியில்லே ஆனால்
பெண்களைக் கண்டால் ஜோராக வாயாடுறோம்
வீணே மண் மீதாடுறோம்......(பசி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY