Tea Soodana Tea
Song Lyrics

டீ.......சூடான டீ......
ஐயா வாங்க....! அம்மா வாங்க வாங்க
வந்து வாங்குங்க ருசி பாருங்க களை தீருங்க
ஓ..... ஐயா வாங்க....! அம்மா வாங்க வாங்க...

கள்ளச் சாராயத்தை காய்ச்சி குடிச்சுவிட்டு
கம்பியை எண்ணப் போகாதிங்க
கள்ளுத் தண்ணி ஆசையினால்
ப்ரெஞ்சு பாலிஷையும் ஸ்பிரிட்டையும்
குடிச்சு விட்டு குடல் வெந்து கஷ்டப்பட்டு சாவாதிங்க
சாவாதிங்க சாவாதிங்க சாவாதிங்க சாவாதிங்க ஓ(ஐயா)

ஆசை மச்சானே இன்னிக்கு எம்புட்டு
காசு சம்பாதிச்சிங்க
அதை ஏதுக்கம்மா நீங்க கேக்குறீங்க
பாக்கத்தானுங்க சும்மா காட்டுங்க

ஆணவம் மிஞ்சிப் போச்சா – என்னை
யாரிண்ணு எண்ணிக்கிட்டே
கணக்கா கேக்குறே எங்கிட்ட.....
ஏங்......கேக்கக் கூடாதா

அடுப்பு ஊதும் பொட்டச்சி ஒங்கிட்ட
அதையும் சொல்ல மாட்டேன்
அடி போடி உதைக்கப்போறேன்

அடுப்பங்கரை காக்கும் பொம்பளை இல்லாட்டி
அப்போ தெரியும் சேதி
என் தங்கையும் இல்லாட்டி அப்போ தெரியும் சேதி
என்னாடி பூச்சாண்டி காட்டுறே
நான் இல்லாட்டிப் போனா நீ ஒட்டாண்டியாகுவே

ஆங் என்னா சொன்ன நீயில்லன்னா
நான் பொழைக்க மாட்டேனா...ஏண்டீ......
ஒன் பொழைப்பும் என் பொழைப்பும்
இன்னும் கொஞ்ச நாளிலே
புரிஞ்சி போவும் பாரேன் நான் போறேன்...சரிதான் போடி..

டீ....சூடான டீ.....ஐஸ் க்ரீம் ஐஸ் மோர்
வாங்கித் தின்னுவோர் ஆசை கொள்ளுவார்
ஆஹா ரொம்ப ஜோர் மனம் இனிக்கும்
வாய் மணக்கும் ஐஸ் மோர் ஐஸ் கிரீம் ஐஸ் மோர்.....

வெய்யில் காலத்துக்கேத்தது
வாங்கிடுங்க களை நீங்கிடுங்க
வெலையுமே மலிவுங்க ஓ..
இதை வாங்கிப் போங்க நீங்க

சார் ஜில் ஜில் ஜில் ஐஸ் க்ரீம் யூ வாண்ட்.....
லைசென்ஸ்........ஐஸ் புரூட்.....
ஏமண்டி ஐசுமோரு மீரு தாகண்டி
வெகு ஜோரண்டி நீ பாரண்டி

தூரு தேசகே ஜானே வாலே
தும் கோ ஐஸ் கிரீம் ஹோனா
நஹிதோ ஐஸ் மோர் ஹோனா..போலோ....
ஐஸ் கிரீம்.....பைசா....லேலோ...அச்சாஜீ....

எந்தா சாரே நிஞ்ஞள்கு ஐஸ் கிரீம் வேணுமா
பக்ஷே ஐஸ் மோர் வேணுமா பறையு என்னிடத்துலே
அசலாயிட்டு ஒரு ஐஸ் கிரீம் தரு...

எலுமிச்சஞ் சாறு ஊத்தி இஞ்சியோடு மிஞ்சாமலே
கொஞ்சமாக உப்பும் போட்டு ரஞ்சிதமா தாளிச்சது மோரு
வெலை அதிகமில்லை வாங்கி குடிச்சுப்பாரு

ஓ.....அண்ணன்மாரே கொஞ்சம்தான் இருக்குதுங்க
ஐஸ் மோரும் தானுங்க தாரேனே நானும் ஜோராக வாங்க
ஓ.....வாங்கிக் குடிங்க..இல்லையானால் ஏமாறுவீங்க..(வாங்கி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY