Chandiranai Vaanam Thalliye

Hero | N.N.Kannappa |
Music Director | G.Ramanathan |
Lyricist | Kannadasan |
Singers | P.Leela |
Year | 1951 |
Song Lyrics
சந்திரனை வானம் தள்ளியே வைத்தது போல்
சேர்ந்திருந்த பூங்கொடியை மரமே சிதைத்தது போல்
வீணையிலே நாதம் கலந்திருக்க மறுத்தது போல்
என் நாதன் எனை வெறுத்தார் எனைப் பிரித்தார்
என் தெய்வம் வெறுத்தார்
சேர்ந்திருந்த பூங்கொடியை மரமே சிதைத்தது போல்
வீணையிலே நாதம் கலந்திருக்க மறுத்தது போல்
என் நாதன் எனை வெறுத்தார் எனைப் பிரித்தார்
என் தெய்வம் வெறுத்தார்
இலை உதிர்ந்த மரமாக அழகிழந்து வாழ்வேனோ
நிறம் குறைந்த ஓவியமாய் நிலை குலைந்து சாவேனோ
என் செய்வேன் ஏதறியேன் யாரை நோவது
என் நாதன் எனை வெறுத்தார் எனைப் பிரித்தார்
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி
அலை மோதி இங்கு நான் வீணே
அலைந்து திரிந்து மனம் நோவேனோ
உயிர் வாழ்வேனோ இந்நாள் நானே
உயர் வாழ்வே இல்லா உலகிலே கதியின்றி...

COMPILED AND UPDATED BY