I Am Come From London
Song Lyrics

ஐயாம் கம் ப்ரம் லண்டன்
ஒன்மீது காதல் கொண்டேன்
மை நேம் இஸ் ஹாம்ப்டன்
ஒன்னையே கல்யாணம் செய்யவும்
ஓடியே வந்தேன் நான் ஐயாம் கம் ப்ரம் லண்டன்...

திண்டாட்டம்தான் உனை மணந்தால்
திரும்பாமல் நீ போ.....! போ.....!

பீங்கிங் நாங்கிங் வாங்கிங் என் பேர் பிங்பாங்
பெண்ணே ஓங்மேல் ஆனேனே நான் ஷிங்ஹாங்
மாசேதுங்கின் நாட்டான் ஷ்யாம்கேஷேக்
எந்தன் பாட்டான்.....

மணம் செய்ய வந்தேன் ஒன்னைங்
வெளம்பரம் கண்டு கண்ணேங்
மறுக்காதே நீயும் என்னைங்
மாலையிடுவாய் பெண்ணேங் டிங்டாங்......

போடாதே சும்மா வேஷம்
வாயால் புத்தர் தர்மம் பேசி
போர் செய்யும் நாட்டார்
உங்கள் நேசம் மோசம்....

பொய்யே பேசாத புண்யன்
புத்தன் போல் காருண்யன்
தியாகி மகான் காந்தி
தேசத்தில் வாழ்ந்திடும்
நான் உன்னை வேண்டேன்....

கண்டதும் என் மீது காதலே
கொண்டோரும் உண்டு பாரிலே
என்றாலும் ஏற்ற பெண்கள் யாரும்
இல்லாமையால் கல்யாணமே
இல்லாமல் வாழ்கிறேன்

காமனும் கண்டாலே நாணுவான்
என் அழகைப் பார் என் குரலைப் பார்
என் ஆட்டம் பார்
அன்போடு என்னை கட்டிக்கொண்டு வாழுவாய்

கோட்டான் குரல் குயிலின் நிறம்
கூசாமல் வான்கோழி போலே நீயும்
ஆட்டம் வீணாக ஆடாதே...ஓ......
ஆங்கிலேயன் என்றெண்ணியே

அடிமை வாழ்வில் உழலும்
அருமை தாய் நாட்டைக் காத்திட நீயே
அயர்வே இல்லாது சேவை செய் போ
ஆசை கொள்ளாதே என் மீதே......

அகிலம் முழுதும் சுற்றினாலும் எங்கும்
தமிழன் போல யாரும்
அழகிலும் குணம் அறிவிலும் வல்ல
ஆண்மகன் இல்லையே பெண்ணே – தாலி
அணியலாமோ கண்ணே – கண்ணால்
அதை சொல்லுவாய் என் முன்னே......(அகிலம்)

புகழுக்குறிய தமிழ்நாட்டின்
பெருமை பாடுவோம் - காதல்
புரிந்து வாழ்வில் இனிமை கண்டு
உயர்ந்து வாழுவோம்.......!

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY