Annaiye Naan Anathai
Song Lyrics

அன்னையே நான் அனாதை
யாரெனக் காதாரம் உனையல்லால் (அன்னை)

தீராத நோயாலென் மணவாளனே அந்தோ...
நடைப்பிணமாக நடமாடவோ
சுக வாழ்வு புவிமேல் வீண் கனவாகவோ
சொல்லாய் தேவி நீயே கதி நிகரில்லா (அன்னை)

நாதனின் துயர் தாளாத பாவை நான்
ஓலமிடுவது உன் செவி விழவில்லையோ
நோயுறல் கர்ம வினையோ – வினையானால்
எனக்கந்த நோய் தந்து நாதனைக் காவாய்

தாள் பணிந்தேன் உன்னையே ஜனனீ
எனை ஆதரி தயாபரி நிகரிலா
அன்னையே நான் அனாதை
யாரெனக் காதாரம் உனையல்லால் (அன்னை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY