Kodaiyile Ilaipatri Kollum
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist Ramalinga Adigalar
Singers T.R.Mahalingam
Year 1947
Song Lyrics

கோடையிலே இளைப்பாற்றிக்
கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே
தரு நிழலே நிழல் கனிந்த கனியே
இளைப்பாற்றிக் கொள்ளும் வகை
கிடைத்த குளிர் தருவே......

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்தில் ஊறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே.
அருளே.....அருளே.......அருளே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY