Aaduvome Pallu Paduvome
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist Mahakavi Bharathiyar
Singers D.K.Pattammal
Year 1947
Song Lyrics

ஆடுவோமே....பள்ளுப் பாடுவோமே:
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று(ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே-இதைத்
தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே (ஆடுவோமே)

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.(ஆடுவோமே)

நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்பறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.(ஆடுவோமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY