Porumai Kadalagiya Booma
Krishna Vijayam
Hero Narasimma Bharathi
Music Director S.M.Subbaih Naidu
Lyricist Papanasam Sivan
Singers N.C.Vasantha Kokilam
Year 1950
Song Lyrics

பொறுமை கடலாகிய பூமாதேவி
சுமை தாங்க முடியாமல்
புகழ் வீணை பயில் வாணி
பதியின் உலகடைந்தாள்.....

ப்ரம்மன் இந்திரன் முதல் அமரருடன்
திருப்பாற்கடல் சேரவும் பூமாதா
அசுரரெல்லாம் மனிதராய்
பங்கஜன் பூபாலன் முதல்
பெயருடன் பிறந்து நிறைந்து செய்யும்
அதர்மங்கள் சகிக்க முடியவில்லையே

மலைகள் கடல்கள் கொடும் விலங்குகளும்
பெரும் பாரம் அல்ல இவரை சுமந்து முன்னே
நாதா திருவுள்ளம் இரங்காதா நாதா என்று புலம்ப
பரந்தாமன் தேவி இயங்கேல் என்றபயம் தந்தான்.....
மதுராவில் தேவகி மைந்தனாகி தோன்றி
உன் துன்பம் துடைப்பேன் என்றான்...

தானே அலங்கார தேர் செலுத்தினான் கம்சன்
தானே அலங்கார தேர் செலுத்தினான்
தங்கையின் மணக் கோலாகல பவனியில்
தானே அலங்கார தேர் செலுத்தினான்.....

வாசுதேவன் கல் நெஞ்சமும் கனிய
ஸ்வர்ண பதுமை போலும்
குழந்தை ஒன்றோடு நிற்கின்றான்
வாசுதேவன் சொன்ன சொல் தவறான்

சபாஷ் மெச்சினேன் என்று
குழந்தையுடன் போக விடுத்தான்....
எட்டாவது குழந்தை மட்டும் போதும்
என்றே விடை கொடுத்தான்

கம்சா..குடி கெடுத்தாய்
தேவர்கள் செய் வஞ்சனையாலே உன்
உயிர்க்கு முடிவு தேடிக் கொண்டாய் கருணையினாலே
கரு சிதைந்திடலாம் உன் கணக்கு தவறலாம்
இதிலே எட்டு ஏது சொல் என்று
தேள் போல் கொட்டி விட்டு மறைந்தார்

ராமவதாரத்தில் பட்டபாடு போதுமே
தம்பியாய் வந்து பட்டபாடு போதுமே
அன்னையின் சொல்லால் சுட்ட வடு
இன்னும் ஆறவில்லையே

வாசுதேவன் அவதரித்தான் மணிவண்ணன்
கண்ணன் தேவகி மைந்தனாய்
வாசுதேவன் அவதரித்தான்
வானவர் மலர் மழை பொழிய
தேவகி வசுதேவர் துயர் ஒழிய
அருவி போல் ஆனந்த கண்ணீர் வழிய
நள்ளிரவு வேளையிலே சிறைச்சாலையிலே
ஹர வாசுதேவன் அவதரித்தான்

நான்கு கைகளுடனே ஜெகன்மோகனாக
நாராயணன் தனக்காதி நால்வரும் காணரும்,
விஸ்வரூப தரிசனம் தந்தருளி
தந்தையே என்னை நந்தகோபன் மனையில்
கொண்டு இக்கணமே சேர்
அங்கு பிறந்த குழந்தையுடன்
திரும்ப வாரும் என்றார்......

மாதவ மைந்தனை நந்தகோபன்
அரண்மனையில் உள்ளே
யசோதை அருகிலே மாதவ மைந்தனை
இன்ப துன்பம் கலந்த
ஆனந்த கண்ணீர் பெருக்குடன் விடுத்தான்
மாயப் பெண்ணை அன்புடன் வாரி எடுத்தான்
திரும்ப நடை தொடுத்தான் சிறையில்
உருகும் தேவி கரத்தில் கொடுத்தான்

காலை உதறி ஒரு உதை கொடுத்தாள்
கம்சன் உருண்டு புவியில் படுத்தான்
தேவி கலகலவென நகைத்தாள்
நாலிரு கைகளுடன் காட்சி அளித்தாள்

கம்சா தேவகி மைந்தன்
உன்னை கொல்ல முன்பே புவியில் வந்தான்
விதி பொல்லாததடா...
இப்படியாக பகவான் அவதரித்தார்
ஓம்...லட்சுமி நாராயண ஸ்மரனே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY