Amma Pasikkuthe Thaaye
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers Jikki,Sarojini
Year 1950
Song Lyrics

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே
ஆண்டவன் எங்களை மறந்தது போலே
அன்னை நீ மறவாதே
வேண்டியதெல்லாம் ஒரு பிடி சோறு
வெறும் சோறாயினும் போதும்...(அம்மா)

உச்சி வெய்யிலில் பிச்சை எடுக்கும்
பச்சை குழந்தைகள் பாரும்
ஒரு பிடி சாதம் ஒரு பிடி அரிசி
ஒரு முழ கந்தையை தாரும்.....
அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே

பாலும் பழமும் வேண்டாம் தாயே
பசிக்கு சோறு கிடைத்தால் போதும்
அம்மா எம்மை பாரும்
பிள்ளைக் குட்டியை பெற்ற தாய்களே
பிச்சைப் போட்டு பசி தீரும்
உங்கள் பிள்ளைகளாய் எண்ணிப் பாரும்

அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே
அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY