Adi Kamatchiye Enthan
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers A.M.Raja,Jikki
Year 1950
Song Lyrics

அடி காமாட்சியே எந்தன் கண்ணே
என்னை ஏமாற்றாதே பெண்ணே (அடி)
அய்யய்யய்யையோ...அம்மம்மம்மா..
லாலாலலலாலா...அப்பப்பப்பா....

போங்க போங்க ஊருக்கு போங்க
அங்கே போனவர் ஏன் வரவேணும்
போதும் போதுமே பெஞ்சாதி மேலே
ஆசை ரொம்பதான் போங்க
விசுவாசம் ரொம்பதான் போங்க....(அடி)

கண்ணே கல்கண்டே என்
கண்ணே கல்கண்டே
காப்பு வேணுமா தங்கக் காப்பு வேணுமா
பாவாடை வேணுமா மேலாக்கு வேணுமா
பட்டாடை வேணுமா கண்ணே கல்கண்டே...
என் ஆசை மோகினி....

ஒண்ணும் வேண்டாமே
தாஜா பண்ண வேண்டாமே
நின்னு பேசுங்க....அங்கே நின்னே பேசுங்க
உங்க உல்லாச பேச்சுக்கும் சல்லாப வீச்சுக்கும்
இல்லாத மொட்டைக்கும்
நானா மயங்கிடுவேன் நின்னு பேசுங்க...

அங்கிட்டும் இங்கிட்டும் போகாமலே
அடுப்ப சுத்துற பூனையை போலே
உங்கிட்ட பக்கத்தில் தானே நானே
ஒய்யாரமாய் இருப்பேனே....

ஓடி வருவேன் ரயிலு போலே
நீயே என் கைக்காட்டி அடி கண்ணாட்டியே
வாழ்வின் கைக்காட்டியே....
ஆஹாஹஹா ஓஹோஹஓஹோ....

காத்திருந்தேனே வழி பாத்திருந்தேனே
கண்ணாளனே நானே என்ன சொல்லுவேனே
காத்தடித்தாலே அரும்பு பூப்பது போலே
கண்டு மகிழ்ந்தேனே கண்ணாளனே நானே ஹோய்.
கண்டு மகிழ்ந்தேனே கண்ணாளனே நானே..(அடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY