Manilathil Vidhiyai Vendra
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers A.M.Raja
Year 1950
Song Lyrics

மாநிலத்தில் விதியை வென்ற
மனிதர் யாரும் இல்லையே
ஞானி என்ன அரசன் என்ன
யாருமே விலக்கில்லையே....(மாநிலத்தில்)

ஜானகி ரகுராமனும்
வனவாசம் போனது விதியினால்
சந்திரமதியும் அரசிழந்து
தாதியானது விதியினால்

வானவில்லின் வர்ணஜாலம்
போலவே விதி லீலையை
மாநிலத்தில் விதியை வென்ற
மனிதர் யாருமில்லையே....

இன்பம் துன்பம் மாறி மாறி
இரவும் பகல் போல் வருகுமே
எழுதி வைத்த எழுத்தை மாற்ற
ஈசனாலும் ஆகுமோ

அழுத கண்ணீர் கொண்டு விதியை
அழித்தெழுத போகுமோ...
மாநிலத்தில் விதியை வென்ற
மனிதர் யாருமில்லையே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY