Maiyai Thottu Ezhuthiyavar
Thulasi Maadam
Hero A.V.M. Rajan & V.Gopalakrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Trichy Thiyagarajan
Singers S.Janaki,Soolamangalam Murali
Year 1963
Song Lyrics

மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்
மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்.....

படத்தில் அழகாய் சிரிப்பவரே என்
பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்
குடத்துள் விளக்காய் இருக்கின்றேன்
மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்..

கோலமிட்டு மாலையிட்டு
குத்து விளக்கை ஏற்றி வைத்தே
காலமெல்லாம் வணங்குகின்றேன்
கண் பாராய் துளசி அம்மா...(மையை)

மீட்டிய வீணை நானென்றால் அதன்
மெல்லிசை இன்பம் அவர்தானே
பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன்
பல்லவியே அவர் பெயர்தானே...

கன்னியர் மனமோ காட்டாறு அது
காவிரி ஆறாய் மாறிடவே
மன்னவர் அவரே மாலையிட
மாதா நீ அருள் புரிவாய்...(மையை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY