Kalyana Sappadu Podum
Thulasi Maadam
Hero A.V.M. Rajan & V.Gopalakrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Trichy Thiyagarajan
Singers S.Janaki
Year 1963
Song Lyrics

கல்யாண சாப்பாடு போடும் முன்னே என்
கையாலே சாப்பாடு போடட்டுமா
உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா (கல்யாண)

வாசலில் கட்டிய தோரணம் போல்
வரிசையாய் காய்கறி வைக்கட்டுமா
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க
பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..(கல்யாண)

நெற்றி வேர்வை துடைக்கட்டுமா
நெருங்கி நெருங்கி அமரட்டும்மா
பட்டுப் புடவை முந்தானையால்
பக்கத்தில் இருந்து வீசட்டுமா..(கல்யாண)

வெட்கப்படாம சாப்பிடுங்க
ஏதும் வேணுமின்னா என்னை கூப்பிடுங்க
பக்கத்தில்தானே காத்திருக்கேன் நான்
பக்குவமாக பாத்துக்குவேன்.....(கல்யாண)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY