Oru Naal Oru Pozhuthu
Anthimanthaarai
Hero Vijayakumar
Music Director A.R.Rahman
Lyricist Vairamuthu
Singers Swarnalatha
Year 1996
Song Lyrics

ஒரு நா ஒரு பொழுது
ஒன் மூஞ்ச காங்காம என் உசுரு அல்லாடுதே
மறு நா வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே

காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்
கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா ஒரு பொழுது

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்கு குழியோடு கொரல் மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு உரு மாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு (ஒரு )

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாம பேசும்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கை தொட்ட வாசம் (ஒரு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY