Pullu Thingum Pullathachi
Anthimanthaarai
Hero Vijayakumar
Music Director A.R.Rahman
Lyricist Vairamuthu
Singers Sumangali
Year 1996
Song Lyrics

புல்லு திங்கும் புள்ளத்தாச்சி
பொட்டு வச்ச முத்துப் பேச்சி
வளக்காப்பு செஞ்சு வப்போம் வாங்க

குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழிக் கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க
பசுமாட்டுக்கு வளக்காப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்பு (புல்லு)

சுத்தம் உள்ள பாலு ரத்தம் என்று கண்டும்
சாதி பேதம் இல்லாம குடிக்கிறிங்க
வெள்ளப் பசு சிந்தும் கோமியத்த அள்ளி
வீடு வாசல் எல்லாமும் தெளிக்கிறீக

கொண்டாட்டம் பசு பொட்டக் கண்ணு போட்டா
கொண்டாட்டம் ஒரு பொட்ட புள்ள பொறந்தா
திண்டாட்டம் இனி போட்டியா பொறந்து
வந்தாலே நான் பசுவா பொறக்கணும்..(புல்லு)

சந்தனத்த அப்பி குங்குமத்த வச்சி
கொம்ப சுத்தி செவ்வந்தி பூவு முடிங்க
கால நேரம் பார்த்து கால் வளவி இட்டு
முக்காம புள்ளப் பெற வரம் கொடுங்க

அம்மாடி இந்த பொட்ட மாடு
என்னைக்குமே நம்மாளு ஒரு
பொட்டக் கண்ணு போடச் சொல்லி நீ கேளு
கொஞ்ச பொறுத்துக்க வரப்போது
சீம்பாலு அந்த ருசியோ ருசியடி..(புல்லு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY