Thoongumoonji Marangal
Sooriyan
Hero Sarathkumar
Music Director deva
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1992
Song Lyrics

தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு பூக்களினாலே
ஹெய் பாட்டெடுத்து பாடுங்கடி நமக்கென்ன கவலை
நம்ம பேர் விளங்க சொல்லி சொல்லி அடிச்சிடு தவிலை

ஆசை வந்தா பாட்டு வரும் பாட்டு வந்தா ஆட்டம் வரும்
போடு சக்க போடு இந்த பூலோகம் கைய தட்டும்....( தூங்கு மூஞ்சி)

ஈர மழை மேகங்களே தூரல் போடுங்கள் – இந்த
ஈச்ச மர கிளையினிலே ஊஞ்சல் ஆடுங்கள்
ஆனை மலை முகடுகளை கடந்து வாருங்கள் –இந்த
ஆல புழை ஓரத்திலே நடந்து பாருங்கள்

பூமிக்கு என்னென்ன தாகங்களோ பங்குனி மாதத்திலே
பூவைக்கு என்னென்ன மோகங்களோ பூ பூத்த காலத்திலே
இந்த நீரும் அந்த வேரும் ஒன்று சேர்கின்ற நாளல்லவோ
ஈர மழை மேகங்களே தூரல் போடுங்கள்....

நேற்றுவரை ஏற்ற துணை நங்கை தேடினாள்
வெள்ளி நிலவெரிக்கும் ராத்திரியில் நாளும் வாடினாள்
கடல் புரத்து மீனிரண்டை கண்ணில் வாங்கினாள் –அதில்
கனவுகளை பூட்டி வைத்து கன்னி ஏங்கினாள்

ஆடைக்குள் நின்றாடும் சிற்றிடைதான் அச்சாரம் கேக்குதம்மா
அங்கங்கள் ஒவ்வொன்றும் வெப்பத்தினால் அங்கங்கு வேர்க்குதம்மா
இந்த நாளும் எந்த நாளும் இங்கு சந்தோஷ சங்கீதமே
வாலிபமே வாலிபமே வாசல் தேடி வா
புது வசந்த விழா காண்பதற்கு விரைந்து ஓடிவா....( தூங்கு மூஞ்சி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY