Kottungadi Kummi Kolli
Sooriyan
Hero Sarathkumar
Music Director deva
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1992
Song Lyrics

கொட்டுங்கடி கும்மி
கொல்லி மல கும்மி
காலில் கொத்துசரபணி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

தாழங்குடை போல் நடக்கும்
தாமரைப்பூ தாயானா
தன் மடியில் தேன் சுமக்கும்
குறிஞ்சி மலர் போலானா
குங்குமம் பொங்கிடும் மங்கல மங்கையரே
உங்க கை வளைக் கொஞ்சிட....(கொட்டுங்கடி)

அரைச்சு வச்ச சந்தனத்த எடுத்துப் பூசுங்க
மயில் இறகினாலே வேர்த்திடாம விசிறி வீசுங்க
தொடுத்து வச்ச பாசி மாலை கழுத்தில் மாட்டுங்க
வாழைத்தண்டு போல இருக்கும் கையில் வளையல் பூட்டுங்க

கட்டழகும் எட்டழகும் கண்ணுபடும் கண்டாலே
கன்னத்துல திருஷ்டி பொட்டு
வைக்க வேணும் முன்னால
இவ மூக்கும் முழியும் பார்க்க பார்க்க
மின்னும் ஆனிப் பொன் போலே....(கொட்டுங்கடி)

சிவப்புக்கல்லு மாணிக்கம் போல் புள்ளப் பொறக்கணும் –அது
சூர்யகாந்தி பூவைப் போல மெல்ல சிரிக்கணும்
பொறந்தப் புள்ள அருவிப் போல தாவிக் குதிக்கணும் – இவ
புடவத்தனத்தில் மூடிக்கிட்டு பாலும் குடுக்கணும்

தங்கக் கட்டி வயித்தில் வந்த
தலைச்சன் பிள்ளே எந்நாளும்
சிங்கக் குட்டி போல் நடந்து
போடும் இங்கு கும்மாளம்
அடி ஆக மொத்தம் நமக்கு நித்தம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.(கொட்டுங்கடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY