Ezhaikku Vazhvu Nalaikku
Theerppu En Kaiyil
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Muthulingam
Singers Malasiya Vasudevan
Year 1984
Song Lyrics

ஏழைக்கு வாழ்வு நாளைக்கு என்று
எவன் சொன்னாலும் நம்பாதே – அவன்
சொன்னது போலே செய்வான் என்று
நெனச்சு நெனச்சு நீ வெம்பாதே....(ஏழைக்கு)

பூனைக்கு எவன்டா மணி கட்டுவான் –இந்த
பூமிக்கு எவன்டா புத்தி சொல்லுவான்

சோத்துக்கில்லாதவ முந்தான விரிச்சா
கோர்ட்டுக்கு அழைச்சு போறாங்க
பெரிய இடத்து பொம்பள செஞ்சா
தெரிஞ்சு தெரியாம இருக்காங்க....

வசதிக்கு வளையுது சட்டம் – இத
வெளியில் சொன்னா என்ன குத்தம்..(ஏழைக்கு)

பஸ்ஸுல ஒருத்தன் ஜேப்படி செஞ்சா
பல பேர் சேர்ந்து உதைப்பாங்க
பதவியில் இருந்து கொள்ளை அடிச்சா
பெரிய தலைவருன்னு துதிப்பாங்க

பதவிக்கு வளையுது சட்டம் –இத
எடுத்து சொன்னா என்ன குத்தம்...(ஏழைக்கு)

தள்ளாடும் கெழவன் தருமம் கேட்டா
தம்பிடி தராம திட்டுவாங்க
கோயிலில் இருக்கும் உண்டியல் நிறைய
காசு பணத்த கொட்டுவாங்க

இப்படி இருக்குது உலகம் இதில்
ஏழைக்கு ஏது வெளிச்சம்......(ஏழைக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY