Yen Indha Mayakkam
Jambu
Hero Jai Sankar
Music Director Sankar Ganesh
Lyricist Kannadasan
Singers P.Suseela
Year 1980
Song Lyrics

ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும்
நாதம் வரும் அது வரை ஏனிந்த (மயக்கம்)

தோளில் பூமாலை ஆட அந்த
தூயன் வருவாண்டி கூட
அவன் தாராததா உன்னை சேராததா
உன்னை கொஞ்சும் நெஞ்சம் கொஞ்சவோ (ஏன்)

கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும்
மோகம் அவன் யோகமே
கோபி மகள் கூட நேரம் தெரியாமல்
கூடும் அவன் ஞானமே
உந்தன் எண்ணங்கள் கன்னங்கள் மின்ன
காலம் வரும் நேரம் வரும் அதுவரை...(ஏன்)

மோகன மங்கல கானம் அறிந்தவன்
ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன்
முரளி மதனன் இரவில் வருவான்டி
சாகஸம் என்னடி சஞ்சலம் என்னடி
கங்கையும் யமுனையும் சங்கமமாவது
இரவா பகலா எதுவும் சரிதான்டி......(ஏன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY