Vaan Nilave Vaan nilave
Song Lyrics

வான் நிலவே......வான் நிலவே
மனமோகன நாதன் கண்ணன்
மலர் நகையோ நீயே மேலாம்
வான் நிலவே.....வான் நிலவே...

உயிரின் பாமா நீ..?? வான் நிலவேதான்
உந்தன் வதனம் பெண்ணே
வண்ண மயில் நீ முகிலும் நானே
ஜகன் மோகினி நீ இனிதானே

வேய்ங்குழல் நான் இசை கீதமும் நீயே
மாதவா முகுந்தா
காதல் கடலினில் எந்நாளுமே
அலை போலாடி ஆனந்த வாழ்வுறுவோம்

கனிவாய் பேசும் கிளியே உந்தன்
காதல் அடிமை நானே
புனித பாக்யம் நானே பெற்றேன்
யார் நிகர் தானே

உண்மை.....ப்ரேமை....
இனி ஒரு கணம் மாறாதே
ஏனோ சந்தேகம்....

மாமயிலும் வான் முகில் போல்
மனமோகன காதல் வாழ்வில்
மகிழ்ந்திருப்போம் நாமே......(வான் நிலவே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY