Manamagizh Vasantha
Song Lyrics

மனமகிழ் வசந்த காலமிதே
மதுமலர் வாசம் மருவும் தென்றல் வீசும்
சுகமே கொண்டாடும் நெஞ்சம்
ஜெகமே மெய்க்காதல் மிஞ்சும் நம் (மனமகிழ்)

உலகினில் ஆனந்தம் எதனாலே
உயர் தரும் தெய்வீக காதலாலே
நிலை பெறும் மெய்க்காதல் வளர்வதும் எவராலே
நிகழ்ந்திடும் செயல் யாவும் என் தந்தை அருளாலே

அறியாமல் வாதாடும் மட மானே
அவனியெல்லாம் எந்தன் ஆட்சிதானே
புரம் எரித்த ஈசன் புகழ்தன்னை அறிந்தீரோ
கோமகன் கணை முன்னே
யார் நிகர் சொல் பெண்ணே

பார் இதோ உன் தந்தை படும்பாடு
பாய்ந்திடும் மாமலர் வலியாலே
பார் இதோ உன் தந்தை படும்பாடு...

என் தந்தையே கொடுமையிதே
தான் பெற்ற சேய்க்கு
யார் செய்வார் துரோகமே
கோபத்தினாலே என் நாதனை மாய்ப்பதோ
கூடாது பெண் பாவமே...

பேதை எந்தன் நாதன் செய்த
பிழையை தீர்க்க வேண்டும் என்
முறையை கேட்க வேண்டும்
பெருமை சேர் மாங்கல்ய பிக்ஷ்சை
தந்து காக்க வேண்டும்.....( பேதை)

சொன்ன சொல்லைக் கேட்டிருந்தால்
இன்னல் வந்து நேருமா
தன்னை விட யாருமில்லை என்ற
கர்வம் போகுமா

உண்மையை நானறிந்தேன்
உள்ள இருள் மாற்றினேன்
என்னுயிர் மீளச் செய்த
தந்தையை போற்றினேன்

நன்மையே செய்யும் தெய்வ
நாயகன் பொற்பாதமே
நம்பியே ஆனந்தமாய்
வாழ்வோம் எப்போதுமே ( மன மகிழ்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY