Paarijatha Poovu Namma
Song Lyrics

பாரிஜாத பூவு நம்ம பசிதனை தீர்த்திடுமா – இதை
பக்குவமாக பாதுக்காத்தா பட்டினி வந்திடுமா..சொல்லு..(பாரிஜாத)

நாட்டுக்கு தேவையான நெல்மரம் - கொண்டு வந்த
நம்பியை சுத்தி வந்து கும்மியடிப்போம்
கூட்டமாக உழைத்து வாட்டமில்லாமல்
கூடவே பாட்டு பாடி கும்மியடிப்போம்.நம்ம (நாட்டுக்கு)

ஏரை எடுத்து பூமி உழக போறேன் கண்ணே
கொஞ்சம் நேரம் பொறுத்தே
கஞ்சியும் கொண்டே வாரேன் மச்சான்
உழுது வெதச்சு தண்ணியும் பாய்ச்சி காவலும் இருப்பேன்
பக்கம் உக்காந்து கிட்டு வெத்தல மடிச்சு வாயில கொடுப்பேன்

நடவு வேல செய்யோணும் இன்னும் களை எடுக்கோணும்
அது நாங்க செய்யிற வேல நீங்க சும்மா இருக்கோணும்
வயல்ல அறுத்து வரப்புகளில வச்சிகிட்டே போவேன்
அத வாரிக் கட்டி தூக்கிகிட்டு ஓடி வந்திடுவேன்

அப்புறம் அடிச்சி அடிச்சி நெல்லுகளையெல்லாம்
எல்லாம் உதிர்த்து போட்டிடுவேன்
அப்போ அளந்து அளந்து கோணிக்குள்ளே
அடைச்சு வச்சிடுவேன்....

பட்டினியுள்ள குடும்பங்களுக்கு
பகிர்ந்தே கொடுப்பேன்.....
சோத்து பஞ்சம் வராம செஞ்சுட்டே
யோஜனை சரிதான் மச்சான்....(நம்ம)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY