Padhukakkanum Paangu Pakkanum
Song Lyrics

பாதுகாக்கணும் பாங்கு பாக்கணும்
பழக்கி வைக்கணும் – பசுவை
பாதுகாக்கணும் பாங்கு பாக்கணும்
பழக்கி வைக்கணும்

பக்குவமாக அக்கறையோடு
பகலும் இரவும் பட்சம் கொண்டே
பாதுகாக்கணும் பாங்கு பாக்கணும்
பழக்கி வைக்கணும் – பசுவை....(பாது)

ஆதரிக்கும் தாயைப் போலே
அமுதமும் கொடுப்பதனாலே
ஆகாரமாக வெண்ணை
ஔடதம் போலே கிடைப்பதனாலே (பாது)

பாலும் தயிரும் நெய்யுடனே
பசும் மாட்டுச்சாணி கோமியம் அதை
பாரில் உயர்ந்தோர் பஞ்சகவ்யமென
சாப்பிடனுமென்பது சாத்திரம்

தெய்வமான காமதேனு
தேவர்களின் சேத்திரம் போலே
சித்திரமும் காட்டுவதாலே
திருட்டு பசங்களை சிவப்பழமாக்கும்
திருநீர் அதிலே உண்டாவதாலே...(பாது)

பொட்டும் பருத்திக் கொட்டையும் தவிடும்
புண்ணாக்குகளையே வைக்கணும்
கட்டணும் கறக்கணும் கழுவணும்
அடிக்கடி கட்டாந்தரையினை மாத்தணும்

காட்டுக்கு முடுக்கணும் மேய்க்கணும் நம்ம
வீட்டுக்கும் திருப்பணும் தேய்க்கணும் அதன்
காளை கன்றுகளை வளர்க்கணும் வண்டி
கவலைக்கும் உழவுக்கும் பழக்கணும்

முட்ட வந்தா மூக்கணாங்கயிறு மாட்டணும் – கொஞ்சம்
எட்டி நின்னு மூங்கிக் கம்ப காட்டணும்
பொட்டு வச்சு மஞ்சளும் பூசணும்
பொம்பளைங்க கவனிக்க வேணும்

தொட்டு பாக்கணும் சொரிஞ்சு கொடுக்கணும்
தட்டிக் கொடுக்கணும் தடவி பாக்கணும் - பசுவை
பாதுகாக்கணும் பாங்கு பாக்கணும்
பழக்கி வைக்கணும்......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY