Thulasi Jeganmadha
Song Lyrics

அன்பினில் யாவுமே அடங்கிடும் அதுபோலவே
அன்பினில் யாவுமே அடங்கிடும் அதுபோலவே
உன்னிலே கண்ணனின்
உண்மையே காண்கின்றேன் நானே......

துளசி ஜெகன்மாதா துணை
நீயல்லால் கதி வேறில்லையே
துளசி ஜெகன்மாதா துணை
நீயல்லால் கதி வேறில்லையே...(துளசி)

கலங்கும் ஓர் பெண்ணின் கண்ணீர் துளியில்
முன்பு காட்சியாய் வந்து மீட்சி தந்தாயே
கருணையை என் மீது பொழிந்திட வல்லாயோ
கைவிடலாகாது என் தாயே.....(துளசி)

ஆண்டவன் போய்விடில்
அடிமைக்கே வாழ்வுண்டோ..ஓ..ஓ...
ஆத்திரத்தால் ஆதரவை இழப்பது முறையோ
அபலையில் துயர் தீர அருள் புரிவாயே
அவனியில் அடைக்கலம் நீயே தாயே..ஸ்ரீ....(துளசி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY