Thaane Varuvaradi
Song Lyrics

தானே வருவாரடி.....அவர்
தானே வருவாரடி – என்
அழகுக்கத்தனை வல்லமை இல்லையோ
போடி......தானே வருவாரடி...

ஏனடி சொல் பாங்கி ஏ....ஏ....ஏ...
ஏனடி சொல் பாங்கி......
ஏனவருக்கிந்த ராங்கி
இவர் சேதி தெரியாதோ
நீயேண்டி தவிக்கிறாய்...(தானே)

நிஜம் பேச தெரியாது
நிலை ஓரிடத்திலே.......
மிஞ்சினால் கெஞ்சுவார்
கெஞ்சினாலோ மிஞ்சுவார்

கசந்து போகுதே வர வர
வந்தபோது வரட்டும்
கண்டவிடமெங்கும் அலைந்து இங்கு
மெள்ள பதுங்கி பதுங்கியே...அவர் (தானே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY