Enathannai Unnai
Song Lyrics

எனதன்னை உன்னை பேதையாள்
என்னைச் சொல்லித் துதிப்பேன்
மறை நான்கும் உன்
தெய்வீக தன்மையை பேசி வாய் ஓயவே

என் மனக் கற்பனைக்கெட்டுமோ
வாய்க்கினிக்கட்டுமோ
இப் பிரபஞ்களெல்லாம் படைப்பாய்
அழிப்பாய் அளிப்பாய் அம்பிகே கெளரி தேவி நீ..

உன்னடி தாமரை என்
மனப் பீடமேல் வைத்திறங்கி
கடாசித்து ரட்சித்து அருள்வாய்
பராசக்தி........பராசக்தி........

மீனாட்சி நீயே எனை ஈன்ற தாயே
துணை வேறு யார்
தஞ்சம் நீ தஞ்சம் நீ தஞ்சமே.....
.

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY