Ulakathukke Unavalikkum
Song Lyrics

உலகத்துக்கே உணவளிக்கும் உழவர் நாம்
உயிர் வாழவே இந்த உலகத்துக்கே
உணவளிக்கும் உழவர் நாம் இந்த
உலகத்துக்கே உணவளிக்கும் உழவர் நாம்....

நஞ்சை புஞ்சை கழனி காடு தந்த கண்ணனையே
பஞ்சம் பிணி தீர நாடு பாலிப்போமே அன்போடு
கண்ணனே உண்மையான தெய்வம் என்று
நிதம் ஆனந்தமாய் ஆடுவோம்.....(உலகத்துக்கே)

ஜீவ தீபமே தாலேலோ தாலலேலோ
சந்திரன் சூரியன் நீயே வான்
தாரா கணமும் நீயே ஜலரங்கா ஜலரங்கா...

ஜால கிருஷ்ணனின் புன்னகை போல்
தவழ்ந்து தவழ்ந்து செல்வாயே
தவழ்ந்து தவழ்ந்து செல்வாயே...

ஜெகஜால கிருஷ்ணனின் புன்னகை போல்
தவழ்ந்து தவழ்ந்து செல்வாயே
தவழ்ந்து தவழ்ந்து செல்வாயே...
ஜலரங்கா ஜலரங்கா...ஜலரங்கா ஜலரங்கா...

ஜீவ தீபமே தாலேலோ தாலலேலோ.....
ஜீவ தீபமே தாலேலோ தாலலேலோ.....
ஜீவதீபமே மங்களமே ஜெய மங்களமே
ஜீவதீபமே மங்களமே ஜெய மங்களமே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY