Viraindhu Vaararo
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers P.Leela
Year 1950
Song Lyrics

விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ
என்னிடம் விரைந்து வாராரோ...

பரந்த வானில் பறவை போலே
களங்கமின்றி நான் திரிந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தென் உள்ளம் புகுந்து
மெள்ள மெள்ள கொள்ளைக் கொண்ட கள்வர்
விரைந்து வாராரோ....

போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
புன்னகை சேர் வதனாம்புஜ மதுவால்
போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்

புன்னகை சேர் வதனாம்புஜ மதுவை
பருகத் துடிக்கும் என் மனம் மதுவை
பருகத் துடிக்கும் என் மனநிலையை
பாங்கி மாலதி அறிந்தினளே...(விரைந்து)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY