Makkal Ellorum Samamaga
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers M.M.Mariappan
Year 1950
Song Lyrics

தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னானே ஆ ஹைய்

ராசா பயம் போச்சுதே நல்ல
காலம் பொறந்தாச்சுதே
மக்கள் எல்லோரும் சமமாக வேணும்...
ஏற்றத் தாழ்வும் மறஞ்சிடவே வேணும்

இந்த சண்டாள மாடு நடக்கோணும்
எங்கு கண்டாலும் சோறு கிடைக்கணும் ஹைய்
இந்தக் காடும் கடந்தாகணும்
வெகுதூரம் நடந்தாகணும்...ஆ....ஆ.....ஆ
தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னானேனா.......

மாடு கன்னோடும் மனிதன் உழைப்பாலும்
பாடு படவேணும் பலனும் பெறவேணும்
நாடு செழிக்கணும் நாமும் பொழைக்கணும்
ஹைய் தன்னானே நன்னான னா னே

நடக்க முடியல்லே குடிக்கக் கூழில்லை
நடு வழிமேலே பசியாலே மாடும் படுத்ததில்லே
உன்னைப்போல மாடும் படுத்ததில்லே
விடமாட்டேன் நட போவோம்
வீம்பு செய்ய வேண்டாம்.....

வேகம் கொறைஞ்சாச்சு தேகம் மெலிஞ்சி போச்சு
காடும் கடந்தானதே மருதநாடும் வரலானதே
ஹைய் தன்னானே நன்னான னா னே
தன்னானே நன்னானேனா ஆ.....ஆ.....ஆ......ஆ...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY