Aavi Soruthe En Aasaiye
Song Lyrics

நீதியாகுமோ நின் நேசமே
நிழல் போலானதே...
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே.....

மோகப் புது மணத்தாலே எனை
மோசம் செய்தாய் நீயே
ஆவி சோருதே என் ஆசையே நிராசையே
ஆவி சோருதே.....

வாசமில்லா மலர் போல் வாடி நின்றேன்
வாழ்வின் நிலை இதுவோ
தாழ்வடைந்தேன் நானே..

ஆடவர் நெஞ்சம் கல்லே
அன்பே இல்லாத நெஞ்சே
அலை போலே மாறும் கனவே
அணையாத காமக் கனவே....(ஆவி சோருதே)

பாவி என்போலொருவர் பார்தனில் இல்லை
ஆவி நிகர் காதலனை காண வழியில்லை
கண்ணே லைலா உனது காதல் நினைவாலே
தேய் நிலவு போலிருளில் நானலைதல் பாராய்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY