Vazhvil Anbale Un Nizhal
Song Lyrics

வாழ்விலன்பாலே உன் நிழல் போலே
வருவேன் நானே மானே
நீ வர்மம் செய்தால் தாளேனே
வானின்பமே காணலாமின்றே நன்றே

மா மோகனா ஜாலமொழியில்
மங்கை என் உள்ளம் மாறிடுமோ போ
தேன் போலிசை கீதம் பாடி
ஜீவ சிதாரை மீட்டிட வா வா.....

சிந்திடும் எந்தன் கண்ணீர்
அது மந்திர கீதம் பாடும்
வானின்பமே காணலாமின்றே நன்றே

சந்திரன் தாரை பொங்கிடும் அலைகள்
சல்லாபமுடனே ஆடும்
ஜகமெல்லாம் கொண்டாடும்
வானின்பமே காணலாமின்றே நன்றே...

தென்றல் தவழ் மல்லிகை போலே
மன்றலில் இன்பம் கொண்டோம் நாமே
கண்கள்தனில் காணும் காதல்
காட்சியின் ஆனந்தம் கொண்டோம் நாமே
காவின் இரண்டு குயிலாய்
மேவி இணைந்தோம் ஒயிலாய்.....(வானின்பமே)

வாழ்வினில் ஒன்றாய் ஓருயிர் ஆனோம்
வாசமும் மலர் போல் நாமே
வாசமும் மலர் போல் நாமே
வானின்பமே காணலாமின்றே.....நன்றே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY