Yaar Poi Solluvar
Song Lyrics

சஞ்சலக் கடலிலே தவிக்கிறேனே
லைலா......லைலா.....என்றே இதை....

யார் போய் சொல்லுவார் – நிலையை
யார் போய் சொல்லுவார் – என் நிலையை
என்னுயிர்க்கினிய அந்தப் பைங்கிளி இருக்குமிடம்
யார் போய் சொல்லுவார்....

வேலைப் பழிக்கும் அவள் நீலக் கருவிழிகள்
வேல் தைக்க நான் செய்யும் வேலை மறந்தேன்
கற்ற நூலை மறந்தேன் காலம் மறந்தேன்
சிலை போலே இருந்தேன் என்று......(யார் போய்)

சின்னஞ்சிறு பருவத்திலே அன்புகொண்டு விளையாடி
என்றும் பிரியோம் எனவே இன்பக் காதல் பண்பாடி
சொன்னதெல்லாம் மறந்தாளோ என் லைலா..
எண்ணமெல்லாம் ஏக்கங்கொண்டு வாடுகிறேன் நானென்று (யார்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY