Madharase Mayile
Song Lyrics

மாதரசே மயிலே.......
மௌனமாகுமோ குயிலே ஆஹா....
பேதமில்லைதானே - அன்பு
பேசிடும் நீ இளமானே ஆஹா....(மாதரசே)

மோகினி என் உயிர் நீ
முழு மாமதியே சாக்ஷி
முடிவில்லா ப்ரேமை கொண்டேனே
முகில் போல் பறந்தே நாமே...

காதல் லோகம் செல்வோம் இன்பக்
காதல் லோகம் செல்வோம் – இன்பக்
கானமும் யாழென சேர்ந்தே ஆஹா
மாதரசே மயிலே..

பாரினிலே நம்மை யார் தடுப்பார்
நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன்
மாரியின் முகம் பார்த்த மாமயில் போல்
மகிழ்வோடு சுகம் நாடுவோம் வாராய்....(மாதரசே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY