Thara Thalathaiye Mele
Song Lyrics

தாரா தலத்தையே மேலே கவிக்கவே
தாளான்மை பெற்ற நயினார்
பேரா யுதிக்கவே வானோருரைக்கவே
பேராய் விளக்கமுறவோர்

ஆராய்வின் மிக்க பேர் நூறாயிரத்து
நால் ஆறாயிரத்து நபிமார்
மாராய மிக்க பேர் வாயார வைத்த பேர்
வாழ்வார் சுவர்க்க பதியே

திக்கற்ற மக்களுக்குத் தெய்வந் துணை புரிந்து
நிற்குமென்றே சொல்லுவார் அது போல்
தீனதயாபரராம் நபிநாயகம் திருவருள் புரிந்தனரே
நபிநாயகம் திருவருள் புரிந்தனரே..

அப்பா வனவேடா அந்த மான் சொல்வதுபோல்
தப்பாமல் வந்துவிடும் தள்ளாதே போகச் சொல்
அப்பால் அதுதான் அணுக மறுத்துவிட்டால்
இப்பால் அதற்கெம்மை எதுவும் செய் என்றார்கள்

மாறுபட்ட வேடனிட்ட நூல் வலைக்குள்ளாகிவிட்ட
மானை விடுவித்த நபிநாயகம் – அந்த
மானுக்காகத் தன்னுயிரைத் தானப் பொருளாகத் தர
மார்பு தட்டி நின்ற நபிநாயகம்

பெற்றெடுத்த மக்களிடம் பற்றுடைய தாயன்பை
உற்றுதவி தந்த நபிநாயகம் – சற்றும்
வற்றுதல் இல்லாது சிறு குட்டிகளும் பாலருந்த
வைத்து மகிழ்வுற்ற நபிநாயகம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY